கான்சியஸ் ப்ளானட் அமைப்பின் மண்காப்போம் இயக்கம், உலக மக்களை மண்ணின் நிலைகுறித்து விழித்தெழச்செய்து, மண்ணுக்கு புத்துயிரூட்டத் தேவையான கொள்கைகளை இயற்றி செயல்படுத்த அவரவர் அரசுகளை அவசரமாக வேண்டிக்கொள்ளச் செய்வற்கான ஒரு முயற்சியாகும்.
இந்த புத்தகம், நடைமுறைப்படுத்தக்கூடிய அறிவியல்பூர்வமான தீர்வுகளை வழங்க விழைகிறது. இவற்றை செயல்படுத்தி அரசுகள் தங்கள் நாட்டு மண்ணுக்கு புத்துயிரூட்ட முடியும்.
ஒரு நாட்டின் மண் வகைகள், அட்சரேகை, விவசாய பாரம்பரியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், பூமியில் மண்ணுக்கு புத்துயிரூட்டுவதற்கான கொள்கைகளை உருவாக்க இது ஒரு நேர்மையான முயற்சி என்பதை தயவுகூர்ந்து மனதில் வைத்துக்கொள்ளவும்.