52%
விவசாய மண் ஏற்கனவே வளமிழந்துவிட்டது
ஏன் மண்ணைக் காக்க வேண்டும்?
மண் காப்போம் என்பது சத்குரு அவர்களால் துவங்கப்பட்டுள்ள உலகளாவிய இயக்கம். இவ்வியக்கம், உலகெங்குமுள்ள மக்களை மண் ஆரோக்கியத்திற்காக ஒன்றுகூடி குரல்கொடுக்க ஊக்கப்படுத்துகிறது, விவசாய மண்ணில் கரிமச்சத்தை அதிகரிக்க தேசிய அளவிலான கொள்கைகள் உருவாக்கவும் செயல்படவும் அனைத்து தேசத் தலைவர்களுக்கும் துணைநிற்கிறது.
மண் காப்போம் செய்தி
மண் காப்போம் இயக்கம், யோகி, ஞானி மற்றும் தொலைநோக்குப் பார்வையுடைய சத்குரு அவர்களால் துவங்கப்பட்டுள்ளது.
பிரச்சனை
கரிமச்சத்து பற்றாக்குறை மண்ணை மணலாக்குக்கிறது, அதன் விளைவுகள்:
உணவுப் பிரச்சனை
இன்னும் 20 ஆண்டுகளில் உணவு உற்பத்தி 40% குறையும் என்று கணிக்கப்படுகிறது, ஆனால் மக்கள் தொகை 930 கோடியாக உயர்ந்திருக்கும்.
வளமில்லா மண், உணவில் ஊட்டச்சத்து இல்லாமல் செய்துவிடும். இன்று காய்கறிகளிலும் பழங்களிலும் முன்பு இருந்ததைவிட 90% குறைவான ஊட்டச்சத்தே உள்ளது.
200 கோடி மக்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பலவித நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தண்ணீர் பற்றாக்குறை
வளமில்லா மண்ணால் தண்ணீரை உறிஞ்சி நீர்நிலைகளில் நீரோட்டத்தை சீர்படுத்த முடியாது.
மண் நீரைப் பிடித்துவைக்காவிட்டால், அதனால் தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி மற்றும் வெள்ளம் ஏற்படமுடியும்.
கரிமப்பொருளால் அதன் எடையில் 90% எடைக்கு தண்ணீரை பிடித்துவைத்து, மெதுமெதுவாக வடியவிட முடியும். அடிக்கடி வறட்சி ஏற்படும் பகுதிகளுக்கு இது பெரிதும் உதவும்.
பல்லுயிர்கள் அழிவு
தங்கள் வாழ்விடம் அழிந்துவருவதால் ஆண்டுதோறும் தோராயமாக 27,000 உயிர்வகைகள் அழிகின்றன என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
இந்தப் பிரச்சனை எந்த அளவு பெரியது என்றால், 80% பூச்சிகள் அழிந்துவிட்டன.
பல்லுயிர்கள் அழிவது, அவற்றின் வாழ்விடமான மண்ணை மேலும் பாதித்து, மண்ணின் மீளுருவாக்கத்தைத் தடுக்கிறது.
பருவநிலை மாற்றம்
மண்ணில் சேமிக்கப்படும் கார்பன், உயிருள்ள தாவரங்களால் சேமிக்கப்படுவதைவிட 3 மடங்கு அதிகமானது, காற்று மண்டலத்தில் சேமிக்கப்படுவதைவிட 2 மடங்கு அதிகமானது. அதாவது காற்றிலுள்ள கரிமத்தை தன்மயமாக்க மண்வளம் இன்றியமையாதது.
உலகத்தின் மண்ணுக்கு புத்துயிரூட்டவில்லை என்றால், அது 85,000 கோடி டன் கரியமில வாயுவை காற்று மண்டலத்திற்குள் வெளியேற்றும், இது கடந்த 30 ஆண்டுகளில் மனிதர்கள் வெளியேற்றியுள்ள அளவைவிட அதிகமானது.
வாழ்வாதார இழப்பு
மண்வளம் அழிவதால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர்
உலகெங்கும் நிலவளம் அழிவதால், 74% ஏழை மக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.
மண்வளம் அழிவதால், உலகில் 10.6 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான செலவு ஏற்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மோதல்கள் & மக்கள் இடம்பெயர்தல்
மக்கள்தொகை அதிகரிப்பதும் உணவு மற்றும் தண்ணீர் பற்றக்குறையும், 2050ற்குள், 100 கோடிக்கும் அதிகமான மக்களை வேறு பகுதிகளுக்கும் நாடுகளுக்கும் இடம்பெயரச்செய்யும்.
ஆப்பிரிக்காவில் 1990 முதல், 90 சதத்திற்கும் அதிகமான பெரிய போர்களுக்கும் மோதல்களுக்கும் நிலப் பிரச்சனைகள் முக்கிய காரணமாக இருந்துள்ளது.
பிரெஞ்சு புரட்சி முதல் அராப் ஸ்ப்ரிங் வரை பல போராட்டங்களுக்கு அதிகரித்துவரும் உணவுப்பதார்த்தங்களின் விலையும் ஒரு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
உயிருள்ள மண்
தீர்வு
குறைந்தது 3-6% கரிமச்சத்தை மீண்டும் மண்ணிற்கு கொண்டுவர வேண்டும்
நிலத்தைத் தாவர நிழலின் கீழ் கொண்டுவந்து, இலைதளை கழிவுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகளைச் சேர்க்க வேண்டும்.
செழிப்பான உயிருள்ள மண், உயிர்வாழ அத்தியாவசியமானது.
திட்டம்
மண் ஆரோக்கியம்
ஒவ்வொரு தேசத்திலும், உறுதுணையான கொள்கைகள் அவசியம்கொள்கைகள்
மக்களின் ஆதரவு அவசியம்மக்கள் ஆதரவு
விழிப்புணர்வு வேண்டும்கொள்கைகள் ஏன் முக்கியமாகின்றன?
மேலும் தெரிந்துகொள்ளுங்கள்
செயல்
350 கோடி மக்களுக்கு இந்த செய்தியை சேர்த்திடுங்கள்,
உலக வாக்காளர்களில் 60%
மண்ணைக் காக்க ஒரு பயணம்
சத்குரு தனியாக மோட்டார்சைக்கிளில் 25 நாடுகள் வழியாக 30,000 கிமீ தூரத்திற்கு லண்டனில் துவங்கி இந்தியா வரை 100 நாள் பயணம் மேற்கொண்டு, மக்களையும் தலைவர்களையும் நிபுணர்களையும் சந்திப்பார்.
அடுத்துவரும் நிகழ்ச்சிகள்
Sadhguru in Muscat - Oman Convention and Exhibition Centre,
Wed, May 25 19:00 - 21:00 GST
ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளவர்கள் சொல்வதைக் கேளுங்கள்
மண் ஆரோக்கியத்தை மீட்கும் பொதுவான இலக்கை அடைய, முக்கியமான பல நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான மக்களும் இணைகிறார்கள்.
துணைநிற்கும் நிறுவனங்கள்
என்னால் என்ன செய்ய முடியும்?
மண்ணுக்கு குரல்கொடுங்கள்!
உங்களால் முடிந்த விதங்களில் மண்ணைப் பற்றி உலகினை பேசச்செய்யுங்கள்
ஊடகங்களில்
#மண்காப்போம்
நாம் இதனை நிகழச்செய்வோம்!